Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் நடிக்கும் கல்கி திரைப்படம் இத்தனை பாகங்களாக ரிலீஸ் ஆகிறதா?

vinoth
சனி, 24 பிப்ரவரி 2024 (08:33 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 3 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். இதையடுத்து சமீபத்தில் 3 நாட்கள் ஷூட்டிங்கில் நடித்துள்ளார்.

இதன் மூலம் கல்கி படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் மொத்தத்தையும் கமல்ஹாசன் நிறைவு செய்துள்ளார். இரண்டாம் பாகத்தில்தான் அவருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் மீதமுள்ள காட்சிகளை இரண்டாம் பாக ஷூட்டிங்கின் போது நடிப்பார் என சொல்லப்படுகிறது. கல்கி முதல் பாகம் மே 9 ஆம் தேதி ரிலீஸ் அகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் ஹாலிவுட் படங்கள் போல 9 பாகங்களாக வெளியாகப் போவதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் படக்குழு 2 பாகங்களாக வெளியாகும் என்றுதான் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது.. 19 மாவட்ட மாணவர்களுக்கு விருது வழங்குகிறார் விஜய்..!

கோட் படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவில் முகாமிட்ட வெங்கட்பிரபு...!

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments