Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2 ரிலீஸுக்கு முன்பே ரி ரிலீஸாகும் முதல் பாகம்…!

vinoth
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (08:43 IST)
கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தியன் முதல் பாகத்தை மே 30 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரின் கில்லி திரைப்படம் சமீபத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் கலக்கி வரும் நிலையில் தன்னுடைய ஹிட் படங்களை எலலம் ரி ரிலீஸ் செய்ய ஏ எம் ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் முதலில் இந்தியன் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments