Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் 64 ஆண்டுகள்… உலகநாயகன் கமல்ஹாசனுக்குக் குவியும் வாழ்த்துகள்!

Webdunia
சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:11 IST)
நடிகர் கமல் சினிமாவில் அறிமுகமாகி 64ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அவருக்கு திரைத்துறையில் இருந்தும் ரசிகர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கமல் குழந்தை நட்சத்திரமாக களத்தூர் கண்ணம்மா படத்தில் அறிமுகமாகி 64 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சாதனையைப் பாராட்டும் விதமாக அவரது கலையுலக சேவையை பாராட்டும் பொருட்டு சக கலைஞர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் வளர்ந்த பின்னர் சாதிப்பது வெகு அரிது. அந்தவகையில் கதாநாயகனாகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பல பரிமானங்களில் தன்னை வெளிப்படுத்தி கலக்கி வருபவர் கமல்ஹாசன். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூலித்து அவரின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தியன் 2, கல்கி ஏடி 2898 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments