Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமலுக்கு அறுவை சிகிச்சை – நோ அரசியல் !

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (14:09 IST)
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு காலில் வைக்கப்பட்ட டைட்டானியம் கம்பியை எடுப்பதற்காக நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட இருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் சபாஷ் நாயுடு படம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டிருந்த போது  2016 ஆம ஆண்டு தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே தடுக்கி விழுந்தத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்து எலும்புகளுக்கு இடையில் இணைப்பாக டைட்டானியம் கம்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தால் சபாஷ் நாயுடு திரைப்படம் தள்ளிக்கொண்டே போய் கடைசியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அறுவை சிகிச்சை செய்து அந்த கம்பியை எடுக்க உள்ளனர். இந்த அறுவை சிகிச்சை முடிந்து இரு வாரங்களுக்கு அவர் ஓய்வெடுக்க உள்ளார். அதனால் அரசியல் மற்றும் சினிமாவுக்கு இரு வாரங்களுக்கு கமல் குட்பை சொல்லியுள்ளார். இருவாரங்களுக்குப் பின் அவர் தொண்டர்களை சந்திப்பது உள்ளிட்ட வழக்கமானப் பணிகளில் ஈடுஅப்டவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற ட்ரஸ்ஸில் ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சூர்யா 44 படம் எப்போது ரிலீஸ்?… கார்த்திக் சுப்பராஜ் கொடுத்த அப்டேட்!

கங்குவா தோல்விக்கு இவருதான் முக்கியக் காரணம்… கொந்தளிக்கும் ரசிகர்கள்!

ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments