Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

vinoth
புதன், 26 ஜூன் 2024 (08:36 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. பாடல்களும் வெளியாகியுள்ளன. படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சில பாடல்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளன. இந்த படத்துக்கான வியாபாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் இப்போது பரவி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் மொத்தம் 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம்.  இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களில் வருவாராம். மூன்றாம் பாகத்தில் 12 கெட்டப்களிலும் வருவாராம்.  இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments