Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தப் படத்தையும் குறைந்த தினங்களில் முடிக்கும் கமல்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2015 (13:31 IST)
கமல் நடித்த பாபநாசம் படம் 32 தினங்களில் முடிந்தது. தூங்கா வனம் தமிழுக்கு 30, தெலுங்குக்கு 30 என மொழிக்கு முப்பது நாள்கள் கணக்கில் மொத்தம் அறுபது தினங்களை எடுத்துக் கொண்டது. தனது அடுத்தப் படத்தையும் இதேபோல் குறைந்த நாள்களில் எடுக்க திட்டமிட்டுள்ளார் கமல்.


 
 
கமலின் புதிய படத்தை, அவரை வைத்து மலையாளத்தில் சாணக்கியன் படத்தை இயக்கிய டி.கே.ராஜீவ்குமார் இயக்குகிறார். குடும்பப் பின்னணியில் நகைச்சுவையாக தயாராகும் இந்தப் படத்தின் திரைக்கதையை கமல் எழுதியுள்ளார். நடிகை அமலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
 
ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படத்தின் பெரும்பாலான காட்சிகள் நியூயார்க்கில் மற்றும் ஜார்ஜியாவில் 50 நாட்களுக்குள் படமாக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ்-மலையாளம் என இருமொழிகளில் உருவாக்கப்பட இருக்கிறது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments