Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீலில் விட்ட ஷங்கர்… கடுப்பான கமல் – என்ன ஆகும் இந்தியன் 2!

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:36 IST)
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகிறது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறாத நிலையில் இந்த படம் தொடருமா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே தேர்தல் பணி இருப்பதால் கமல்ஹாசன் தேர்தல் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என தெரிகிறது. தேர்தலுக்கு பின்னரும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் தான் நடிப்பார் என்றும் இந்தியன் 2 படத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது 

இதனால் இப்போது ஷங்கர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியறிந்த கமல் இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம். அதற்குக் காரணம் தான் நடிப்பதற்கு தயாராக தேதிகளை ஒதுக்கிய போதெல்லாம், படப்பிடிப்பை நடத்தாமல் தயாரிப்பாளரும் இயக்குனரும் தேதிகளை வீணாக்கிவிட்டதாக அவர் நினைக்கிறாராம்.  இதனால் இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்பதே தெரியாத சூழல் நிலவுகிறதாம்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments