Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

vinoth
வெள்ளி, 17 மே 2024 (07:15 IST)
கமல்ஹாசன் நடிப்பில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் உத்தம வில்லன் . கடந்த 2015ஆம் ஆண்டு  இந்த படம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. மிகப்பெரிய நஷ்டத்தால் அவர்களால் தொடர்ந்து செயல்பட முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். இன்னும் அவர்களால் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டுவரமுடியவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பேற்று கமல் மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு நடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் 10 ஆண்டுகள் ஆகியும் அவர் படம் நடித்துத் தரவில்லை என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்திருந்தனர். இதையடுத்து இந்த  விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் கமல்ஹாசன் இப்போது பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இது சம்மந்தமாக கமல்ஹாசன், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சிலரை இது சம்மந்தமாக சந்தித்து பேசியுள்ளாராம். அப்போது லிங்குசாமி இப்படி அறிக்கை எல்லாம் விட்டிருக்க வேண்டாம். அதற்கு சில நாட்கள் முன்னர்தான் நான் அவரை சந்தித்து இதுகுறித்து விவாதித்தோம். நல்ல முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் ஏன் இப்படி அவசரப்பட்டார் என அவர்களிடம் தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments