Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சசிகலாவை சீண்டிய கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சசிகலாவை சீண்டிய கமல்ஹாசன்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (09:45 IST)
நடிகர் கமல்ஹாசன் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் ஒரே டாப்பிக்காக பேசப்படும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் சிறையில் உள்ள சசிகலாவை சீண்டும் விதமாக பேசினார்.


 
 
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று அனைவரும் எதிர்பார்த்தபடியே நமீதா வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதாவிடம் கமல் பல கேள்விகள் கேட்டு பதில் வாங்கினார்.
 
அப்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள குறையாக என்ன பார்க்கின்றீர்கள் என கமல் கேட்டதற்கு, பிக்பாஸ் வீட்டில் இன்னும் கொஞ்சம் அதிகம் வசதி செய்யப்பட்டிருக்கலாம். போதுமான இடம் அதிகம் இல்லை.
 
எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கும் பங்கேற்பாளர்களுக்கு ரிலாக்ஸ் செய்யும் வகையில் விளையாட்டு மைதானம் போன்றவை இருந்திருந்தால் மன அழுத்தம் இருக்கும் நேரத்தில் நன்றாக இருந்திருக்கும். மொத்தத்தில் பிக் பாஸ் வீடு ஒரு ஃபைவ் ஸ்டார் ஜெயில் என்று கூறினார்.
 
அதற்கு நடிகர் கமல் வெளியிலும் சில ஃபைவ் ஸ்டார் ஜெயில் இருக்கிறது என கூறினார். சமீப காலமாக தமிழக அரசையும் ஆளும் கட்சியினரையும் விமர்சித்து வரும் கமல் வெளியில் சில ஃபைவ் ஸ்டார் ஜெயில் இருக்கிறது என கூறியது அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் வசதிகளை அனுபவித்து வந்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
 
சில நாட்களுக்கு முன்னர் புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்க இருக்கும் தமிழ் தலைவாஸ் கபடி அணியின் ஆடை அறிமுக விழாவில் பங்கேற்ற கமல் தமிழ் தலைவாஸ் என பண்மையில் பெயர் வைத்தது பிடித்திருக்கிறது, ஏனென்றால் சிலர் தற்போது ஒருமையில் பேசி வருகிறார்கள் என அமைச்சர் ஒருவர் கமலை ஒருமையில் பேசியதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார் கமல்.
 
சமீப காலமாக ஆளும் தரப்பை கமல் அதிகமாக விமர்சித்து வருவதால் தற்போது கமல் வெளியில் சில ஃபைவ் ஸ்டார் ஜெயில் இருக்கிறது என கூறியது சிறையில் சசிகலா லஞ்சம் கொடுத்து வசதிகள் அனுபவித்து வந்ததைதான் மறைமுகமாக கூறுகிறார் என அவரது ரசிகர்கள் வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments