Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு ஆடியோ விழா - கமல் கலந்து கொள்கிறார்

விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு ஆடியோ விழா - கமல் கலந்து கொள்கிறார்
, திங்கள், 28 ஜூலை 2014 (19:00 IST)
சிவாஜியின் அன்னை இல்லமும் அதிலுள்ள நபர்களும் கமலுக்கு எப்போதுமே ஸ்பெஷல். அன்னை இல்லத்தின் அனைத்து விசேஷங்களும் கமலுக்கு அழைப்பு அனுப்பாமல் நடப்பதில்லை. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நடிக்க வந்த போது முதலில் வாழ்த்தியது கமல்தான்.
கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்து மார்க்கெட்டை கும்மென வைத்துள்ளார் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் சிகரம் தொடு. தூங்கா நகரம் கௌரவ் இயக்கியிருக்கும் இப்படத்தை யுடிவி தயாரித்துள்ளது.
 
படத்தின் பெயருக்கு ஏற்ப மலை சிகரங்களில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். சிகரத்தில் படமாக்குகிற அளவுக்கு அப்படியென்ன கதை? இந்த கேள்விக்கான பதில் மட்டுமில்லை. படம் குறித்த நூலிழை செய்திகூட கசியாமல் காத்து வருகிறது படயூனிட். படத்துக்கு இசை டி.இமான்.
 
ஆகஸ்ட் 7 ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிட்டு ஆகஸ்ட் இறுதியில் படத்தை வெளியிடுவதாக திட்டம். பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல் கலந்து கொள்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil