Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைவருக்கும் புரியும் வகையில் கமல் போட்ட டுவீட்: ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 3 மே 2020 (17:19 IST)
கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்தாலே அதற்கு அர்த்தம் தேடி பலர் நாட்கணக்கில் அலைவதுண்டு. தூய தமிழில் அவர் பதிவு செய்யும் டுவிட்டுக்களை மிகுந்த சிரமத்திற்கு பின்னரே யாராவது தூய தமிழில் பதிவு செய்வார்கள். அதன்பின்னரே அவர் என்ன சொல்லியிருக்கின்றார் என்பது தெரிய வரும்
 
இந்த நிலையில் சற்றுமுன் மே தினத்தில் தனது கட்சியின் தொண்டர்கள் உழைப்பாளர்களுக்கு செய்த உதவி குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். நல்லவேளையாக இந்த டுவீட் தூய தமிழில் இல்லாமல் அனைவருக்கும் புரியும் வகையில் இருப்பது ஆறுதலான ஒன்றாக கருதப்படுகிறது. அவர் சற்றுமுன் பதிவு செய்த டுவீட் இதுதான்:
 
உழைப்பவர்கள் பசித்திருக்கக் கூடாது என்கின்ற “எம் எண்ணத்தை” செயலாக்கி தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் எளியோர்க்கு உதவி பொருட்கள் வழங்கிய மக்கள் நீதி மய்யத்தின் கள வீரர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அலாதி அன்பிருந்தால், அனாதை யாருமில்லை’ என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments