Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

Siva
ஞாயிறு, 2 ஜூன் 2024 (11:24 IST)
இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாளை அடுத்து அண்ணனுக்கும் பிறந்தநாள், தம்பிக்கும் பிறந்தநாள், இரட்டிப்பு சந்தோசம் என உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
இரட்டிப்பு சந்தோஷம் என்பது தமிழில் ஒரு விந்தையான சொற்றொடர். சந்தோஷத்திற்கு அளவீடு இருக்க முடியுமா என்ன? ஆனால் அதற்கு ஓர் உதாரணம் போன்றதுதான் இன்றைய நாள் எனக்கு. 
 
மூன்று சகோதரர்களில் அண்ணனுக்கும் இன்று பிறந்தநாள், தம்பிக்கும் இன்று பிறந்தநாள் என்கிற மகிழ்வான தருணம் இது. 
 
இசையில் கதையைச் சொல்லிவிடும் என் அன்பான அண்ணன் இளையராஜா; திரை எழுத்தில் ஒரு ரீங்காரத்தைச் சேர்த்து விடும் அன்புத் தம்பி மணிரத்தினம்...  பிறந்தநாளில் இருவரையும் மனம் இனிக்கும் மகிழ்ச்சியோடு ஆரத்தழுவி வாழ்த்துகிறேன். 
 
எங்கள் மூவரின் கலைச்சொந்தம் என்றென்றும் தொடர்க.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

புதுமுகங்கள் நடிப்பில் வெளியான ‘சய்யாரா’ 300 கோடி ரூபாய் வசூல்… ஆச்சர்யத்தில் பாலிவுட்!

துப்பாக்கி + கஜினி = மதராஸி… ஏ ஆர் முருகதாஸ் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments