கேப்டனுக்கே ஸ்ட்ரைக் கொடுத்த கமல்ஹாசன்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (09:12 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  கேப்டன் ஆக இருக்கும் விஜய்யை எச்சரிக்கை செய்த கமல்ஹாசன் ஸ்ட்ரைக் அட்டையை காண்பித்தார். மூன்று முறை இதே போன்ற நீங்கள் ஸ்ட்ரைக் அட்டையை பெற்றால் நீங்கள் இந்த நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வார கேப்டன் ஆன விஜய் சமீபத்தில் போட்டியாளர்கள் மத்தியில் பேசிய போது வெளியே  பாசத்துடன் இருக்கும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள், நீங்கள் வெளியே சென்றால் வேற மாதிரி நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதை சுட்டிக் காட்டிய கமல்ஹாசன் வன்முறையை அதிகமாக நீங்கள் கையாண்டதால் உங்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன் என்று கூறி, ஸ்ட்ரைக் அட்டையை காண்பித்தார். மூன்று முறை இதே மாதிரி நீங்கள் இந்த கார்டை பெற்றால் நீங்கள் என்னுடன் வந்து சந்தோஷமாக பேசி விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியதை அடுத்து விஜய் அதிர்ச்சி அடைந்தார்

இதை பிரதீப் அந்தோணி கைதட்டி ரசித்தார். இந்த புரமோ வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments