Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் போட்டியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்டவர் இவர்தான்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (05:42 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் என்று விளம்பரப்படுத்தப்பட்டதே தவிர முதல் நாளிற்கு பின்னர் அவர் காணாமல் போய்விட்டார். அவர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு தோற்ற நடிகரா? என்றுகூட சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பேர்களில் நேற்று முதல் ஆளாக நடிகர் ஸ்ரீ வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று அதிக ஓட்டுக்கள் விழுந்த நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
பிக்பாஸ் குடும்பத்தில் இருந்து வெளியேறும் முன்னர் பிக்பாஸ் குடும்பத்தினர் அனைவரையும் கட்டிபிடித்து நன்றி கூறி வெளியேறினார். அவரை அனைவரும் நெகிழ்ச்சியுடன் ஆறுதல் கூறி வழியனுப்பி வைத்தனர். இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் அடுத்த நபர் யார்? என்பதுதான் தற்போதைய ஒரே கேள்வியாக உள்ளது. ஜூலி அல்லது அனுயா வெளியேற்றப்படுவாரா? என்ற கணிப்பு ஏற்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றியையும் தோல்வியையும் பார்த்துள்ளேன்: 33 வருட சினிமா பயணம் குறித்து அஜித் அறிக்கை..!

அஜித்தை திடீரென சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா, ஆதிக் ரவிச்சந்திரன்.. என்ன காரணம்?

மோசமான விமர்சனங்கள் வந்தும் வசூலில் அள்ளும் ‘கிங்டம்’… முதல் வார இறுதி கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

AI மூலமாக ராஞ்சனா க்ளைமேக்ஸ் மாற்றம்… இயக்குனரைத் தொடர்ந்து தனுஷும் அதிருப்தி!

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments