கமல் இரு வேடங்களில் நடித்துள்ள உத்தம வில்லன் ஏப்ரல் 2 வெளியாகும் என கூறப்பட்டது. இப்போது வெளியீட்டு தேதியை ஒருவாரம் தள்ளி ஏப்ரல் 10 -ஆம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.
சீனு ராமசாமி இயக்கியுள்ள இடம் பொருள் ஏவல் மார்ச் 27 வெளியாகிறது. உத்தம வில்லன் ஏப்ரல் 2 வெளியானால் ஒரேவாரத்தில் இடம் பொருள் ஏவலை தூக்க வேண்டிவரும். அதனால் ஏப்ரல் 10 -க்கு உத்தம வில்லனை மாற்றியதாக கூறப்படுகிறது.
படத்தின் யுஎஸ் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியிருக்கும் பிரைம் மீடியா இந்த செய்தியை உறுதி செய்துள்ளது.