Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உத்தம வில்லன் சவுண்ட் மிக்சிங் - லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் கமல்

உத்தம வில்லன் சவுண்ட் மிக்சிங் - லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் கமல்
, வியாழன், 30 அக்டோபர் 2014 (09:55 IST)
கமல் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஏமாற்றமே. விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என்று மூன்று படங்களில் நடித்தும் எந்தப் படமும் இந்த வருடம் திரைக்கு வரப்போவதில்லை.
 
அதேநேரம் அடுத்த வருடம் இந்த மூன்றுப் படங்களும் வரிசையாக வெளியாக இருக்கின்றன.
 
முதலில் உத்தம வில்லன் திரைக்கு வரவிருக்கிறது. இதன் கடைசிக்கட்ட சவுண்ட் மிக்சிங்கிற்காக விரைவில் கமல் லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவிருக்கிறார். விஸ்வரூபம் படத்தின் மிக்சிங்கும் இங்குதான் நடந்தது.
 
அதையடுத்து பாபநாசம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. கடைசியாகதான் விஸ்வரூபம் 2. இதன் ஸீஜி வேலைகள் இன்னும் முடியவில்லை. உத்தம வில்லன் ஆரம்பித்ததுமே விஸ்வரூபம் 2 வேலைகளை கமல் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil