Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷை அழைத்து கரெக்‌ஷன் சொன்ன கமல்… ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (16:16 IST)
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் கமல் தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தில் நடித்து முடிப்பதாக இருந்தார்.

ஆனால் இப்போது படத்தை தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து பலவாறாக செய்திகள் வெளியாகின. பஹத் பாசில், நவாசுதீன் சித்திக் மற்றும் பிரபுதேவா ஆகியவர்களின் பெயர்கள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இப்போது வில்லனாக நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் லோகேஷை அழைத்த கமல் திரைக்கதையில் சில மாற்றங்களை சொல்லியுள்ளாராம். ஏனென்றால் லோகேஷின் மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதி பல இடங்களில் ஸ்கோர் செய்தார் என்பதால் அதுபோல நம் படத்திலும் ஏதாவது ஆகிவிடக் கூடாது என கமல் உஷாராக உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments