Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி 2 என்னும் குப்பை படம் வரலாறு படைப்பதா?: கமால் விமர்சனம்!!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2017 (16:35 IST)
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.


 
 
படத்தை பார்த்த அனைவரும் ஆஹாஒஹோ என புகழ, பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமால் ஆர் கான் படத்தை பற்றி மோசமாக விமர்சித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது பாகுபலி 1 போன்ற படம் வரலாறு படைத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பேன். ஆனால் பாகுபலி 2 ஒரு குப்பை படம், அது வசூல் சாதனை படைப்பது சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. ராஜமெளலி ரசிகர்களை முட்டாளாக்கிவிட்டார்.
 
பாகுபலி 1 தென்னிந்திய படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. ஆனால் பாகுபலி 2 தென்னிந்திய படத்தை இனி பார்க்கவே கூடாது என்ற நிலைக்கு என்னை கொண்டு வந்துவிட்டது.
 
பாகுபலி 2 படத்தின் காட்சிகள் யதர்தத்தை விட 100 மைல் அப்பால் உள்ளது. ஒரு கம்பூட்டர் கேம் பார்ப்பது போன்ற உணர்வை பாகுபலி 2 ஏற்படுத்தியது என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு ரசிகர்கள் பலர் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தும், அவரை திட்டியும் வருகின்றனர். கமால் ஆர் கான் இதற்கு முன்னர் மோகன் லாலை சோட்டா பீம் என விமர்சித்து தவறாக பேசி பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாரா & நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்த தனுஷ்…!

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க ஓகே சொன்ன ஜெயம் ரவி!

சின்னப் பையன் கூட முறைக்கிறான்… விஜய் குறித்த பேச்சுக்கு பதிலளித்த போஸ் வெங்கட்!

அடுத்த கட்டுரையில்
Show comments