வசனங்களை மனப்பாடம் செய்து போய் நடிக்க முடியாது – சிம்பு பட நாயகி பாரட்டு!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (13:53 IST)
சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவின் புத்திக் கூர்மை குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படம் தற்போது முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் டீசர் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.

மாநாடு படம் குறித்த சமீபத்திய நேர்காணலில் ‘சிம்பு மிகவும் புத்திக் கூர்மை மிக்கவர், அவர் ஒவ்வொரு ஷாட்டுக்கும் புதிதாக தன்னிச்சையாக ஏதாவது செய்துகொண்டே இருப்பார். நம்மால் வெறுமனே வசனங்களை மனப்பாடம் செய்து போய் பேசிவிட்டு வரமுடியாது. அவரது நடிப்புக்கு ஈடுகொடுத்து நடிக்கும் படி நமக்கு அழுத்தம் வந்துவிடும்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்
Show comments