மோகன்லால் படத்துடன் க்ளாஷ்… வசூலில் கலக்கும் கல்யாணி ப்ரியதர்ஷனின் ‘லோகா’!

vinoth
திங்கள், 1 செப்டம்பர் 2025 (08:33 IST)
ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘லோகா’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் ஆகியோர் நடிப்பில் டோம்னிக் எழுதி இயக்கியுள்ள ‘லோகா’ திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகும் vampire வகை சூப்பர் வுமன் வகைத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை துல்கர் சல்மான் தன்னுடைய ‘wayfrayers films’ நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படம் மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ திரைப்படத்தோடு வெளியானது. முதலில் குறைவான திரைகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று தற்போது 100க்கும் மேற்பட்ட திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதுபோல நாளுக்கு நாள் வசூலும் அதிகரித்து வருகிறது. ஐந்து நாட்களில் இந்திய அளவில் மட்டும் இந்த படம் சுமார் 23 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது மோகன்லாலின் ‘ஹ்ருத்யபூர்வம்’ படத்தின் வசூலை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments