Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்பாத்தி எஸ்.அகோரம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்வு

கல்பாத்தி எஸ்.அகோரம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்வு
, திங்கள், 23 ஜூன் 2014 (16:49 IST)
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கல்பாத்தி எஸ்.அகோரம், 2014-15ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் [Tamil Nadu Cricket Association (TNCA)] துணைத் தலைவராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
ஏ.ஜி.எஸ் எண்டெர்டய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் பல பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்து வரும் கல்பாத்தி எஸ்.அகோரம் திருட்டு பயலே, சந்தோஷ் சுப்பிரமணியம், மாசிலாமணி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா, மதராச பட்டினம், எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், மாற்றான், வேலூர் மாவட்டம், நவீன சரஸ்வதி சபதம், தெனாலி ராமன் உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். 
 
தற்போது தனுஷ் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் அனேகன், ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன், தனுஷ் நடிக்கும் வை ராஜா வை, அதர்வா நடிக்கும் இரும்புக் குதிரை ஆகியவற்றைத் தயாரித்து வருகிறார்.
 
கல்பாத்தி எஸ். அகோரத்துடன் மேலும் நான்கு பேர், இந்தச் சங்கத்தின் துணைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன், தொடர்ந்து 14ஆவது ஆண்டாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil