Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு புதிய சொகுசு காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:40 IST)
நடிகர் ரஜினிக்கு புதிய BMW X7 என்ற சொகுசு காரை சர்ப்பிரஸாக வழங்கினார் கலாநிதி மாறன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது.

இந்நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில்  கடந்த  மாதம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் விமர்சன அளவில் வசூல்  ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று, உலகளவில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.

எனவே ஜெயிலர் பட  தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்தை சந்தித்து காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். அதன்படி,  படத்தில் அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக 20 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளதால், சன்பிக்சர்ஸ் அதிபர் கலாநிதிமாறன், நடிகர் ரஜினிகாந்திற்கு சர்ப்பிரைஸாக BMW X7 என்ற சொகுசு காரை வழங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.  பல கார்கள் அவருக்குக் காண்பிக்கப்பட்ட நிலையில், ரஜினிகாந்த் இந்தகாரை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments