Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை

வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை
, புதன், 4 மார்ச் 2015 (14:13 IST)
வெளிநாடுகளிலும் காக்கி சட்டை நல்ல வசூலை பெற்று வருகிறது.
 
யுஎஸ்ஸில் இப்படம், இந்திய மொழிப் படங்களில் பாதல்பூருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று தினங்களில் 32 திரையிடல்களில் காக்கி சட்டை 35.48 லட்சங்களை வசூல் செய்துள்ளது.
 
யுகே மற்றும் அயர்லாந்தில், இந்திய மொழிப் படங்களில் காக்கி சட்டை முதலிடத்தில் உள்ளது. இங்கு முதல் மூன்று தினங்களில் 35 திரையிடல்களில் 46.53 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் காக்கி சட்டைக்கே முதலிடம். முதல் மூன்று தினங்களில் 11 திரையிடல்களில் 27.65 லட்சங்களை வசூலித்துள்ளது. இங்கு ஷமிதாப் 4 வாரங்களில் 23.42 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. 
 
மலேசியாவிலும் காக்கி சட்டையே முதலிடம். 14 திரையிடல்களில் 82.63 லட்சங்களை தனதாக்கியுள்ளது. வெளிநாடுகளில் காக்கி சட்டை பெற்றிருக்கும் சூல், சிவ கார்த்திகேயன் மாஸ் நடிகராக உருவாகியிருக்கிறார் என்பதற்கான உறுதியான அத்தாட்சியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil