Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியன் 2: வெயிட்டான ரோலில் வெளுத்துக்கட்டும் காஜல் அகர்வால்!

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (11:32 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. கமல்ஹாசனுக்கு ஜோடியாக  காஜல் அகர்வால் நடிக்கிறார். பிரியா பவானி ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைவிடாத அரசியல் பணிகள் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக கமலஹாசன் கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.  தற்போது பொங்கல் தினத்திற்கு பிறகு மீண்டும் 'இந்தியன் 2' படக்குழுவினருடன் இணைந்துள்ளார். 
 
இந்நிலையில் இப்படத்தின் நாயகி காஜல் அகர்வால் சமீபத்தில் பெங்கேற்ற பேட்டி ஒன்றில் இந்தியன் 2 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இதுவரை நான் நடிக்காத ஒரு ரோல் இந்திய 2 படத்தில் கிடைத்துள்ளது. என்னுடைய கதாபாத்திரம் உண்மையிலேயே வித்தியாசமானது.  இதுக்கு மேல் வேறு எதுவும் என்னால் கூறமுடியாது என நகைத்துக்கொண்டே கூறினார். காஜல் அகர்வாலுக்கு இந்த படத்தில் நெகடிவ் வேடம் என இணையத்தில் தகவல் பரவி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments