Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஜல் அகர்வால் குழந்தையை செல்லம் கொஞ்சிய பிரபல நடிகைகள்

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (12:26 IST)
தனது குழந்தையோடு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார் காஜல்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து இதுவரை காஜல் தனது குழந்தையின் முகம் தெரியாதவாறு இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக குழந்தையின் முகம் தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷி கண்ணா ஆகிய இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments