ரஜினியுடன் இணையும் லோகேஷ்… கைதி தயாரிப்பாளரின் ரியாக்‌ஷன் இதுதான்!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (13:58 IST)
மாநகரம், கைதி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது. இப்போது அவர் விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் இயக்கத்தில் கைதி 2 படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால் அடுத்தடுத்து அவர் வேறு படங்களில் ஒப்பந்தம் ஆவதால் கைதி 2 படம் இப்போதைக்கு உருவாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இப்போது ரஜினிகாந்துடன் அவர் இணையும் தலைவர் 171 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பகிர்ந்துள்ள ட்வீட்டில் “வாழ்த்துக்கள் லோகேஷ். புதிய மற்றும் எக்ஸைட்டிங்கான பல உலகங்களோடு கலக்குங்கள். இந்த உலகம் உங்களோடு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குநர் வி. சேகர் காலமானார்: சமூகம் பேசிய படைப்பாளியின் இறுதிப் பயணம்!

SSMB29: ராஜமவுலி - மகேஷ்பாபு பட டைட்டில் அறிவிப்பு!..

அஜித்துக்கே இந்த நிலைமையா? சம்பளத்தில் பிடிவாதம் காட்டும் ஏஜிஎஸ்

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments