Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி ரிலீஸ் வேண்டாம்… அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (17:15 IST)
அமைச்சர் கடம்பூர் ராஜு திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி ஆகிய  படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் ஆகியோர் இயக்கத்தில் ஏலே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்த திரைப்படம் பிப்ரவரி 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. 17 நாட்கள் இடைவெளியில் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் விதித்துள்ள புதிய விதியின் திரையரங்கில் வெளியாகி 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும். அதனால் 30 நாட்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என உறுதி அளிக்க சொல்லி ஏலே படக்குழுவினருக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கு சிறுபட தயாரிப்பாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு உண்டாகியுள்ளது. இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரையரங்க உரிமையாளர்களின் இந்த அறிவிப்புக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குபேரா படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் தனுஷ்!

குட் பேட் அக்லி படத்துக்காக இந்த வெளிநாட்டுக்கு செல்லும் படக்குழு… அஜித் மேனேஜர் கொடுத்த அப்டேட்!

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட கல்கி பட வசூல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த பட நிறுவனம்!

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments