Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி விவசாயி ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (16:26 IST)
விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம்.

புதிதாக தமிழுக்கு வந்துள்ள சோனி லைவ் தளத்தில் ரிலிஸாகும் என முன்னரே அறிவித்த நிலையில் இப்போது தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 30 ஆம் தேதி கடைசி விவசாயி திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments