Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி ரிலீஸீல் இருந்து பின் வாங்கிய விஜய் சேதுபதி படம்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:00 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கபப்ட்டு இருந்தது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுவதுமாக தயாராகி விட்டாலும் சில ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா லாக்டவுனும் சேர்ந்துகொண்டதால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் முடிவு செய்துள்ளாராம். சோனி லிவ் தளத்தில் ரிலீஸாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.

எல்லாம் முடிந்து அடுத்த மாதம் ரிலீஸாகும் என நினைத்த நிலையில் இப்போது ஓடிடியில் இருந்து விலகி திரையரங்கில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டாராம் மணிகண்டன். இது சம்மந்தமாக விஜய் சேதுபதி மிகப்பெரிய அளவில் பொருளாதார உதவி செய்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments