Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கபாலிடாவும், பொண்டாட்டிடாவும் ஓர் அபூர்வ சந்திப்பு

கபாலிடாவும், பொண்டாட்டிடாவும் ஓர் அபூர்வ சந்திப்பு
, செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (10:16 IST)
மழைவிட்டும் தூவானம் விடாத குறையாக கபாலி புயல் அடங்கினாலும் புழுதி கிளம்பத்தான் செய்கிறது.
 

 
 
ரஜினியின் கபாலிடா வசனத்தை அப்படியே மாற்றி, பொண்டாட்டிடா என்று ஒரு பெண் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. பொண்டாட்டின்னா... பழைய படத்துல வரமாதிரி தழைய தழைய பொடவை கட்டிகிட்டு... தல நெறய பூவ வெச்சிகிட்டு... நெத்தி நிறைய குங்குமம் வெச்சிகிட்டு... ஏ பொண்டாட்டி அப்படின்னு கூப்பிட்டா... வந்து காலப் புடிச்சு சொல்லுங்க அத்தான்னு சொல்ற... அந்த மாதிரி பொண்டாட்டின்னு நெனச்சியா... பொண்டாட்டிடா.. என்று அந்தப் பெண் பேசியதை அனைவரும் ரசித்தனர். சம்பந்தப்பட்ட ரஜினியும் அதனை ரசித்திருக்கிறார். 
 
அந்தப் பெண் யார் என்பதை விசாரித்து அவருக்கு ரஜினி வீட்டிலிருந்து போன் சென்றிருக்கிறது. ரஜினி அந்தப் பெண்ணை சந்திக்க விரும்புகிறார் என. 
 
அப்புறம் என்ன. தனுஷ் வீட்டில் அந்த சந்திப்பு நடக்க, சம்பந்தப்பட்ட பெண் உணர்ச்சியில் பேச முடியாமல் வாயடைத்துப் போக, போட்டோ எடுத்துக் கொண்டு பிரிந்தார்கள் கபாலிடாவும், பொண்டாட்டிடாவும். 
 
சினிமா மாதிரியே இருக்கு இல்ல.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் பிரபுவின் தொடர் தோல்வியை தடுக்குமா வீர சிவாஜி...?