Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இணையத்தில் வெளியான கபாலி பாடல் காட்சி : படக்குழுவினர் அதிர்ச்சி

இணையத்தில் வெளியான கபாலி பாடல் காட்சி : படக்குழுவினர் அதிர்ச்சி
, திங்கள், 30 நவம்பர் 2015 (13:38 IST)
நடிகர் ரஜினிகாந்த நடித்து வரும் கபாலி படத்தின் ஒரு பாடல் காட்சி இணையதளத்தில் வெளியானதால் அப்படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 
 
அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இயக்கும் படம் கபாலி. நடிகர் ரஜினிகாந்த இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் ரஜினியின் பல்வேறு விதமான கெட்டப்புகள் இணையத்தில் வெளிவந்தது.
 
படப்பிடிப்பு நடக்கும் போது எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. கபாலி படத்தில் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று, ரஜினியின் மகள் சௌந்தர்யா சில நாட்களுக்கு முன்பு நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
 
அதன்பின், கபாலி படக்குழுவினரும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கபாலி படம் சம்பந்தமாக எந்த புகைப்படங்களும் வெளிவராதவாறு பார்த்துக் கொண்டனர்.
 
சென்னை மற்றும் மலேசியாவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், பாங்காக் சென்று சில நாட்கள் படப்பிடிப்பை நடத்தினர். அடுத்ததாக கோவா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், கபாலி படத்தில் படம்பிடிக்கப்பட்ட ஒரு பாடல் காட்சி இணையதளத்தில் வெளியாகி, வாட்ஸ்-அப் மூலம் வைரலாக பரவி வருகிறது.  அந்த பாடல் மொத்தம் இரண்டு நிமிடம் வருகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 
ஏற்கனவே, விஜயின் புலி, அஜீத்தின் வேதாளம் ஆகிய படங்களின் சில காட்சிகளும் இணையத்தில் வெளியானது. இப்போது கபாலி படத்தின் காட்சியும் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil