Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலி சாதனையை ஒரே நாளில் முறியடித்த கபாலி

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2016 (15:28 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பாகுபலி படத்தின் சாதனையை கபாலி படம் முதல் நாளிலேயே முறியடித்துள்ளது.


 

 
தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, வசூலில் சக்கைப்போடு போட்ட படம்  ‘பாகுபலி’. அந்த படம் இதுவரை எந்த படமும் எடுக்காத வசூலை பெற்றதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம் கபாலி. இந்தப் படம் பாகுபலியை முறியடித்து விட்டது. பாகுபலியின் மொத்த வசூலை கபாலி முறியடிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவில்  திரையிடப்பட்ட பிரீமியர் காட்சியின் வசூலில்தான் கபாலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.


 

 
அதாவது, அமெரிக்காவில் பிரீமியர் காட்சியில் பாகுபலி ரூ.1.39 கோடி வரை வசூலித்தது. ஆனால், கபாலி முதல் நாளிலேயே ரூ.1.45 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. 
மேலும் பல சாதனைகளை கபாலி திரைப்படம் நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments