Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (21:30 IST)
‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா ரொம்பவே பிஸியான நடிகையாக மாறிவிட்டார். மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’, ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 3 படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். 
 
இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் பயங்கர ஹிட். இப்படத்தை தமிழில் ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். 
 
விஜயலட்சுமி என்ற பெயரரில் ஜோதிகா நடித்துள்ளார். லக்ஷ்மி மஞ்சு, விதார்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.
 
டீசரை நடிகர் சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments