Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘காலா’ ரிலீஸாகும் தேதியில் நயன்தாரா படத்தின் ஷூட்டிங் தொடக்கம்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (11:54 IST)
‘காலா’ ரிலீஸாகும் தேதியில் நயன்தாரா நடிக்கும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருக்கிறது.
நயன்தாரா நடித்துவரும் தெலுங்குப் படம் ‘சை ரா நரசிம்மா ரெட்டி’. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்தை நடிகர் ராம் சரண் தயாரிக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கிறார். அமிதாப் பச்சன் கெஸ்ட் ரோலில் நடிக்கும் இந்தப் படத்தில், தமன்னா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகே மிகப்பெரிய செட் போடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துள்ளது. அதில், சிரஞ்சீவிக்கும் நயன்தாராவுக்கும் திருமணமாகும் காட்சியும், அது தொடர்பான காட்சிகளும் படமாக்கப்பட்டன. அதில்தான் அமிதாப் பச்சனும் நடித்திருந்தார். இந்நிலையில், ஒரு  இடைவேளைக்குப் பிறகு வருகிற 7ஆம் தேதி இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அன்றுதான் ரஜினியின் ‘காலா’ படம் ரிலீஸாகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments