Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க க க போ... கதறும் அறிமுக இயக்குனர்

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (13:16 IST)
வடிவேலால் பிரபலமான வார்த்தை க க க போ. அதனை தனது படத்தின் விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளார், நலன் குமாரசாமி. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்,


 


அறிமுக இயக்குனர் விஜய்.கொரியப் படமான மை டியர் டெஸ்பரடோ படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி, காதலும் கடந்து போகும் என்ற பெயரில் எடுத்துள்ளார் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி, மடோனா நடித்துள்ள இந்தப் படத்தின் விளம்பரங்களில், க க க போ என வடிவேலின் வசனத்தை போட்டுள்ளனர். அதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடிவேலின் வசனத்தை நலன் வைத்ததில் விஜய்க்கு என்ன பிரச்சனை?
 
கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்கப் போறாங்க என்ற படத்தை விஜய் எடுத்து வருகிறார். இந்தப் பெயரின் சுருக்கம், க க க போ. 
 
தனது படத்தை க க க போ என்று விளம்பரப்படுத்த நினைத்த விஜய்க்கு நலன் குமாரசாமியின் விளம்பர வாசகம் கடும் ஏமாற்றத்தைதர, என் படத்தோட கேப்சனை நீங்க எப்படி பயன்படுத்தலாம் என சண்டைக்கு புறப்பட்டிருக்கிறார். விரைவில் பஞ்சாயத்து நடத்தப்படலாம்.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments