Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த இயக்குனர் கே விஸ்வநாத் வீட்டில் நடந்த அடுத்த மரண்ம்… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:06 IST)
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் கே விஸ்வநாத. பல கிளாசிக் படங்களை இயக்கியுள்ள இவர் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகம் ஆனவரே. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களான சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து மற்றும் பாச வலை ஆகிய படங்களை இயக்கியவர் கே விஸ்வநாத். இவர் இயக்கிய சங்கராபரணம் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாக அமைந்தன.

இந்நிலையில் கே விஸ்வநாத், வயது முதிர்வு காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 92. அவர் இறந்து ஒரு மாதத்துக்குள்ளாக இப்போது அவரது மனைவி காசிநாதுணி ஜெயலட்சுமி இயற்கை எய்தியுள்ளார். உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக காலமான அவருக்கு வயது 88.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments