Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டா?... முன்னணி தயாரிப்பாளர் கொடுக்கும் அழுத்தம்!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (08:36 IST)
ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து கலக்கினார்.

இந்நிலையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்னர் எஸ் ஜே சூர்யாவை வைத்து படம் தயாரிக்க முன்பணம் கொடுத்துள்ளார். அப்போது அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாததால், அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என சொல்லியுள்ளார். ஆனால் இப்போது எஸ் ஜே சூர்யா பல படங்களில் பிஸியாக உள்ள நிலையில், அந்த படத்தை இப்போது நடித்துக் கொடுக்க சொல்லி, கட்டாயப்படுத்துவதாகவும், அதற்கு எஸ் ஜே சூர்யா மறுத்துள்ளாகவும் சொல்லப்படுகிறது. இதனால் எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்ட் தடை விதிக்க சொல்லி ஞானவேல்ராஜா அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

பெரிய பட்ஜெட்டில் மற்றொரு சோகம்..? எம்புரான் படம் எப்படி இருக்கு?

ஒரு மாதத்திற்கு படத்தை வெளியிட முடியாது! வீர தீர சூரனுக்கு தடை! - அதிர்ச்சியில் தியேட்டர்கள், ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments