Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டலான மேக்கிங்கில் கவனம் ஈர்க்கும் மாதவன் & ஜோதிகாவின் ஷைத்தான் டிரைலர்!

vinoth
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (07:23 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.இப்போது மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது.

தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு சைத்தான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இப்போது ஜோதிகா வெளியிட்டுள்ளார். படம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையடுத்து தற்போது ஷைத்தான் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோதிகா- அஜய் தேவ்கன் குடும்பத்தில் நுழையும் மாதவன் அமானுஷ்யமான விஷயங்களால் ஏற்படும் குழப்பங்களை எப்படி கையாள்கிறார் என்பதை மிரட்டலான மேக்கிங்கில்  கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

லூசிஃபர் 3 பற்றி பரவிய வதந்தி… இயக்குனர் பிரித்விராஜ் மறுப்பு!

நான் கற்றுக் கொண்டிருந்தபோது அவன் தேசிய விருது வாங்கினான்… நண்பனைப் பாராட்டிய லோகேஷ்!

திரைப்படமாகிறது மேகாலயா ஹனிமூன் கொலை: ராஜா குடும்பத்தினர் சம்மதம்.. டைட்டில் அறிவிப்பு..!

40 கோடி சப்ஸ்க்ரைபர்களை தாண்டிய Mr.Beast! நேராக வீட்டுக்கு சென்று பரிசளித்த Youtube CEO!

அடுத்த கட்டுரையில்
Show comments