Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 17 முதல் நடிப்பைத் தொடங்கும் ஜோதிகா

Webdunia
சனி, 25 அக்டோபர் 2014 (12:37 IST)
திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் ஜோதிகா மலையாள ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார். இதன் படப்பிடிப்பு நவம்பர் 17 தொடங்குகிறது.
மஞ்சு வாரியருக்கு ரீ என்ட்ரியாக அமைந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ ஜோதிகாவுக்கும் ரீ என்ட்ரியாக அமைந்தது ஆச்சரியம். ஆனால், கணவருடன் கருத்து மோதல் ஏற்பட்டு மஞ்சு வாரியர் நடிக்க வந்தார் என்றால், கணவரின் சம்மதத்துடன் அவரது தயாரிப்பில் நடிக்கிறார் ஜோதிகா. ஜோதிகா நடிக்கும் இந்த ரீமேக்கை சூர்யாவின் 2 டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
 
மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவே இந்த ரீமேக்கையும் இயக்குகிறார். ஜோதிகாவின் கணவராக படத்தில் நடிப்பவர் ரகுமான். நவம்பர் 17 சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். அதையடுத்து டெல்லியில் படப்பிடிப்பை தொடர உள்ளனர்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments