Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிகா நடிக்கும் இந்தி படத்தின் ரிலீஸ் அப்டேட்!

vinoth
வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:57 IST)
தமிழில் பிரபல கதாநாயகியாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். ஆனால் அதன் பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் திரும்பவும் நடிக்க வந்த அவர் பல படங்களில் நடித்தார்.

இப்போது மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் அவரின் நடிப்புக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. தமிழில் இப்போது படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டுள்ள அவர் இப்போது பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு சைத்தான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இப்போது ஜோதிகா வெளியிட்டுள்ளார். படம் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜோதிகா 1998 ஆம் ஆண்டு டோலி சஜா கே ரக்னா என்ற இந்தி படத்தின் மூலமாகதான் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னர் அவர் எந்த இந்தி படத்திலும் நடிக்கவில்லை. இப்போது 25 ஆண்டுகள் கழித்து இந்தி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments