Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவி குழந்தைகளுடன் 36 வயதினிலே வெற்றியை கொண்டாடிய சூர்யா

மனைவி குழந்தைகளுடன் 36 வயதினிலே வெற்றியை கொண்டாடிய சூர்யா
, புதன், 20 மே 2015 (11:24 IST)
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான முதல் படம், எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் என்று, 36 வயதினிலே படத்துக்கு நிறைய முக்கியத்துவம் உண்டு.
படம் முடிந்த பிறகு பர்ஸ்ட் காப்பி பார்த்த சூர்யா, ஏ சென்டர்களில் படம் போகும் என்று இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூவிடம் சொல்ல, ஓகே அது போதுமே என்று ரோஷன் பதிலளித்ததாக படயூனிட் கூறுகிறது.
 
சூர்யா சொன்னது போல் ஏ சென்டர்களில் படம் ஹிட். போட்ட பணத்தை திருப்பியிருக்கிறது படம். லாபமும் உறுதி. இதற்கு மேல் சக்சஸ் பார்ட்டி நடத்தாமலிருந்தால் எப்படி? 
 
ஜோதிகா, குழந்தைகள் மற்றும் படயூனிட்டுடன் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார் சூர்யா.
 
36 வயதினிலே போன்ற ஃபீல் குட் படங்களை 2டி என்டர்டெய்ன்மெண்ட் தொடர்ச்சியாக தயாரிக்கட்டும், தொடர்ச்சியாக வெற்றி பெறட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil