Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

vinoth
செவ்வாய், 21 மே 2024 (07:42 IST)
கேஜி எஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 மூலமாக இந்தியா முழுவதும் அறியப்படும் இயக்குனராக உருவாகியுள்ளார் பிரசாந்த் நீல்.  இதையடுத்து அவர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கினார். அந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்துக்கு தற்போது NTR 31 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், என் டி ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜூனியர் NTR தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் தேவரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலிகான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தின் முதல் பாகம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments