Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதை உன் புருஷன்கிட்ட போய் சொல்லும்மா! ஜோதிகாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (22:21 IST)
ஜோதிகா நடிப்பில் இயக்குனர் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா, 'ஒரு திரைப்படத்தில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போததா? எதற்கு இரண்டு, மூன்று, நான்கு ஹீரோயின்கள். இதை பார்த்து இளைஞர்கள் நான்கு கேர்ள் பிரண்ட் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் சமுதாயம் என்ன ஆவது? என்று கேள்வி எழுப்பினார்.



 


ஜோதிகாவின் இந்த கருத்தை நெட்டிஸன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். முதல்ல உங்க கணவரை ஒரே ஒரு ஹீரோயினோட நடிக்க சொல்லுங்க , அப்புறம் மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லுங்க... என்று துரை என்பவரும்,  அத உன் புருஷன் கிட்ட சொல்லுங்க முதலில்..என்று போதி ராஜ வர்மா என்பவரும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சிங்கம் 2 படத்தில் அனுஷ்கா-ஹன்சிகா மற்றும் ஐட்டம் டான்சுக்கு அஞ்சலி, சிங்கம் 3 படத்தில் ஸ்ருதிஹாசன் - அனுஷ்கா மற்றும் ஐட்டம் டான்சுக்கு நீதுசந்திரா, 24 படத்தில் நித்யாமேனன் - சமந்தா, 'மாஸ் படத்தில் நயன்தாரா-ப்ரணிதா, வாரணம் ஆயிரம் படத்தில் ரம்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகா, பூமிகா, கஜினி படத்தில் அசின், நயன்தாரா என்று ஸ்ரீகாந்த் என்பவர் ஒரு பட்டியலே போட்டு காட்டியுள்ளார். ஜோதிகா இதையெல்லாம் பார்த்தாரா? பார்த்தால் என்ன நினைப்பார் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் லுக்கில் மிரட்டும் நிதி அகர்வால்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது… சிரஞ்சீவி சர்ச்சைப் பேச்சு!

டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!

பும்ரா இல்லாமல் செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது… முன்னாள் வீரர் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments