Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ஜீவா?... ஓ இதுதான் காரணமா?

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (08:00 IST)
தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மார்க்கெட்டில் இருந்தவர் நடிகர் ஜீவா. அவர் நடித்த கோ, நண்பன்,ஈ உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யவில்லை. இதனால் தோல்விப் படங்களாகக் கொடுத்து இப்போது தனக்கான இடத்துக்காக போராடி வருகிறார்.

இந்நிலையில் அவர் ‘சூப்பர் குட் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் புதிய படமாக அவரின் ஹிட் படங்களில் ஒன்றான ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் எம் ராஜேஷ்தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவா மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவா மனசுல சக்தியின் வெற்றியால் அடுத்தடுத்த படங்கள் இயக்கி தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்தார் ராஜேஷ். கதையே இல்லாமல் எப்படி ஹிட் தருகிறார் என எல்லோருக்கும் ஆச்சரியம். அந்த திருஷ்டி நான்காவது படத்தில் கழிந்தது.

அடுத்தடுத்து அவர் இயக்கிய அனைத்து படங்களும் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. அதுபோல ஜீவாவும் மோசமான படங்களாகக் கொடுத்து மார்க்கெட் அவுட் ஆனார். அதனால் இப்போது இருவருமே ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணையும் படம் சிவா மனசுல சக்தி  படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments