Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயராம் இப்போது யானை எழுத்தாளர்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2015 (13:20 IST)
ஜெயமோகனின் யானை டாக்டர் என்ற கதையை வாசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே வாங்கிப் படித்துவிடுங்கள். அற்புதமான கதை.
 
நடிகர் ஜெயராம் ஒரு யானைப் ப்ரியர். தனது வீட்டில் ஒரு யானையை வளர்த்து வருகிறார். தனி பாகன், டாக்டர் என்று யானைக்கு எல்லா சௌகரியங்களும் உண்டு. ஜெயராமின் யானைப் பாசத்தைப் பார்த்து யானை மையக்கதைகளில் அவரை பலமுறை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படி யானை ப்ரியத்தை மையப்படுத்தி ஜெயராம் நடித்த படங்களில், திருவம்பாடி தம்பான் முக்கியமானது.
 
யானைகள் அவ்வப்போது மதம்கொண்டு பாகனையும், வீதியில் போகிறவர்களையும் புரட்டியெடுத்து கொல்வதால், யானைகள் மீது பொதுமக்களிடையே சின்ன அதிருப்தி தோன்றியுள்ளது. அது ஜெயராமை வருத்தப்பட வைக்க, யானைகளின் அருமை பெருமைகளை வைத்து, ஆட்கூட்டத்தில் ஆனப்பொக்கம் என்ற புத்தகத்தை எழுதினார். அதனை சமீபத்தில் மம்முட்டியை வைத்து வெளியிட்டார். புத்தகத்தை பெற்றுக் கொண்டது, ஜெயராம் தனது வீட்டில் வளர்க்கும் யானையின் பாகன், குட்டன்.
 
அடுத்தமுறை ஜெயராமை பார்க்கையில், யானை சௌக்கியமா என்று கேளுங்கள். மகிழ்ந்து போவார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

தீபிகாவின் குழந்தைதான் கல்கி படத்தை உருவாக்கி உள்ளது… கமல்ஹாசன் பேச்சு!

அட்லியின் பாலிவுட் தயாரிப்பான பேபி ஜான் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Show comments