Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராத்தே பாபு படத்தில் மூன்று கெட்டப்கள்… உடல் எடையைக் குறைக்கும் ரவி மோகன்!

vinoth
செவ்வாய், 27 மே 2025 (11:22 IST)
ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியானப் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக அமைந்தன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. கடந்த ஆண்டு ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

இப்போது அவர் கைவசம் ஜீனி, கராத்தே பாபு மற்றும் பராசக்தி ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜீனி படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க, கராத்தே பாபு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. சட்டமன்றத்தில் நடப்பது போன்ற அந்த காட்சிகளின் தொகுப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல கவனத்தை ஈர்த்து படத்துக்கு ஒரு நேர்மறையான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் இப்போது இந்த படம் பற்றி சுவாரஸ்யமானத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில்  ரவி மோகன் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும், ஒரு கதாபாத்திரத்துக்காக உடல் எடையைக் குறைக்க உடல் பயிற்சிகள் செய்துகொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மோகன்லாலின் ‘ப்ளாக்பஸ்டர்’ துடரும் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கராத்தே பாபு படத்தில் மூன்று கெட்டப்கள்… உடல் எடையைக் குறைக்கும் ரவி மோகன்!

சிக்கலில் ‘இட்லி கடை’ ரிலீஸ்!… அந்த தேதியில் துண்டு போடும் சூர்யா 45 படக்குழு!

கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங்கா?... படக்குழுவினர் தேடும் நபர்!

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments