Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் ரேஸில் இணையும் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை!

vinoth
புதன், 1 ஜனவரி 2025 (15:39 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை டி சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘என்னை இழுக்காதடி’ வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் இப்போது பொங்கல் ரிலீஸில் இணையும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வீர தீர சூரன் திரைப்படமும் பொங்கலுக்கு வர முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments