Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி ஒரு குட்டி கமல் சொல்கிறார் பிரபுதேவா..!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (15:38 IST)
லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, அரவிந்த்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள போகன் படம் வரும் 23ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி, ஹன்சிகா, படத்தின் தயாரிப்பாளர்களான ஐசரி கணேஷ், பிரபுதேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய பிரபுதேவா என் தயாரிப்பில் போகன் தான் முதலில் வெளியாக வேண்டியது. ஆனால் தேவி பட வேலைகள் விரைவில் முடிந்து அது முதலில் ரிலீஸாகிவிட்டது. வித்தியாசமான கதையை இயக்கி லக்ஷ்மண் தனது வேலையை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்கள். படத்தில் ரவி, ஹன்சிகா, அரவிந்த் சாமி என அனைவரும் நன்றாக நடித்துள்ளார்கள்.
 
ஜெயம் ரவியை ஒரு குட்டி கமல் ஹாஸன் என்றே கூற வேண்டும். எதுவுமே தெரியாதது போன்று அமைதியாக இருப்பார். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து படத்தில் சிறப்பாக நடித்துவிடுவார். போகன் படத்தில் ஹன்சிகாவின் வித்தியாசமான நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். மின்சாரக் கனவு படத்தில் நடிக்கும்போது அரவிந்த்சாமியுடன் நட்பு ஏற்படவில்லை. ஆனால் தற்போது அவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments