Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய், தனுஷுடன் மோத முடிவு செய்த ஜெயம் ரவி

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2018 (22:11 IST)
வரும் தீபாவளி திருநாளில் விஜய்யின் சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 'என்.ஜி.கே' பின்வாங்கியது. இதனால் 'சர்கார்' சோலோவாக தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் திடீரென தனுஷின் 'வடசென்னை' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்ற செய்தி வெளிவந்தது. அதுமட்டுமின்றி அஜித் படம் தீபாவளிக்கு வரவில்லை என்றாலும் அஜித்தின் தீவிர ரசிகராகிய ஆர்.கே.சுரேஷின் 'பில்லா பாண்டி' திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு வந்தது. எனவே தீபாவளி போட்டி சற்று கடுமையானது.

இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் 'அடங்க மறு' திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் விஜய், தனுஷ் படங்களுடன் ஜெயம் ரவியின் 'அடங்கமறு' படமும் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக் கொள்ளுங்கள்.. ஆளுநர் நிகழ்ச்சியைக் கண்டித்த வைரமுத்து!

ஆன்லைன் மோசடி…தயாரிப்பாளர் ரவீந்தரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நயன்தாராவிடம் மட்டும் ஸ்ட்ரிக்… வி ஜே சித்துவுக்கு இலவசமாகப் பாடலை கொடுத்த தனுஷ்!

லோகேஷ் தயாரிப்பில் யுடியூபர் பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’… ஷூட்டிங் நிறைவு!

தேசிய விருது வாங்கும்போது என் நகங்களில் மாட்டு சாணம் ஒட்டியிருந்தது- நித்யா மேனன் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments