தயாரிப்பாளருக்குத் திருப்தியளிக்காத ஜெயம் ரவியின் ‘ஜீனி’… மீண்டும் ஷூட்டிங்கா?

vinoth
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:25 IST)
ஜெயம் ரவியின் 32 வது திரைப்படமாக ஜீனி என்ற திரைப்படம் உருவாகி ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 25 ஆவது படமான இந்த படத்தை அர்ஜுனன் என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் மகேஷ் முத்துச்செல்வன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி வருகிறது. பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே முடிந்தும் ரிலீஸ் பற்றி எந்த தகவலும் இல்லை.

இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தி இல்லாததால் தற்போது மீண்டும் 30 நாட்கள் காட்சிகளை மீண்டும் எடுக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து தோல்வி படங்களாகக் கொடுத்துவரும் ஜெயம் ரவிக்கு இந்த படமாவது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

பளிங்கு சிலை போல ஜொலிக்கும் ராஷி கண்ணா… அழகிய க்ளிக்ஸ்!

70000க்கு வாங்கி 5 லட்சம் லாபம் பார்த்தேன்.. பாரதிகண்ணனுக்கு ஜாக்பாட் அடித்த படம்

அடுத்த கட்டுரையில்
Show comments